News July 26, 2024

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரான்சிஸ் ராஜ்குமார் கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா, அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News March 4, 2026

தருமபுரி: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58, 514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 4, 2026

பாப்பிரெட்டிப்பட்டி: 7 புதிய வீடுகள் திறப்பு

image

பாப்பிரெட்டிப்பட்டி பூதநத்தம் ஊராட்சியில் தனியார் அறக்கட்டளை சார்பில் புதிதாக 7 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனை நேற்று மாவட்ட ஆட்சியர் சதீஸ், அறக்கட்டளைத் தலைவர் ஸ்வரன் சிங் முன்னிலையில் திறந்து வைத்தார். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசுத் துறை அலுவலர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

News March 4, 2026

தருமபுரி: ஆற்றில் குளித்தவர் சடலமாக மீட்பு

image

ஒகேனக்கல்: திருக்கோவிலுார் அருகே உள்ள பெருமணம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், 24. ஓசூரிலுள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஞாயிறு அன்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். அங்கு தடை செய்யப்பட்ட கோத்திக்கல் பரிசல் துறை அருகே குளித்து கொண்டிருந்தபோது ஆற்றில் மூழ்கினார். இந்நிலையில் நீண்ட தேடுதலுக்கு பிறகு அதே பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை.

error: Content is protected !!