News December 11, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் டிச.19 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். மேலும் வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் பொதுவான கோரிக்கைகளை மட்டும் விவாதிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
விருதுநகர்: ரூ.10 லட்சம் பரிசு.. கலெக்டர் அறிவிப்பு

ஒற்றைப் பயன்பாடு நெகிழிக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகள் பயன்படுத்துவதை ஊக்குவித்து முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். முதல் பரிசாக ரூபாய் 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூபாய் 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
விருதுநகர்: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

விருதுநகர் மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI: 90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank – 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News December 16, 2025
விருதுநகர்: 18 வயதிலே இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த கருப்பையா மகன் மாரிச்செல்வம் 18, மங்காபுரம் சதுரகிரி மகன் காளிராஜ் 18, கடந்த மாதம் சந்திரபிரபு என்பவரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது சம்பந்தமாக போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர்கள் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கலெக்டர் சுகபுத்ரா இருவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


