News February 27, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை (பிப்.28) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் விவசாய பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாகவும் நேரடியாகவும் தெரிவித்து பயன் பெறுங்கள் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 21, 2025
முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் விளங்குகிறது

“தொழில் வளா்ச்சியில் சிறந்து விளங்குவதற்கு காரணம் மப்பேடு, ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம், இருங்கக்கோட்டை தொழிற்சாலைகள் தான். ஒரு பெரிய இடத்தில் தொழிற்சாலைகள் கட்டப்படும்போது, அங்குள்ள இடத்தில் 10% சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மரங்கள் நட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் விளங்குகிறது” என ஆட்சியா் பிரதாப் பெருமிதம் கொண்டார். மாவட்டத்தின் பெருமையை ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: பெண் பலி

ஆந்திராவைச் சேர்ந்த போலீஸ்காரரான சைதன்யாவின் மனைவி பிரியங்கா (31), நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) ஆரணி அடுத்த கொசவன்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு, தனது 10 வயது மகன் உடன் பேருந்தில் சென்றார். பின், ஆரணியில் இருந்து அவரது தங்கை சசிரேகாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
News April 20, 2025
மீஞ்சூர்: வேலைக்கு வந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (54) கூலி தொழிலாளி. இவர் நேற்று மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் கூலி வேலை செய்வதற்காக வந்தபோது, நெஞ்சு வலி இருப்பதாக படுத்திருந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சக பணியாளர்கள் வேலை செய்ய எழுப்பிய போது சத்தம் இல்லாததால் அவரை பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.