News February 24, 2026

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் அறிக்கை

image

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27-ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News

News February 25, 2026

திருச்சி: ரேஷன் கார்டில் பிரச்சனையா? ஒரு CALL போதும்!

image

உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News February 25, 2026

திருச்சி: சாலை விபத்தில் 3 மாத குழந்தை உயிரிழப்பு – சோகம்

image

புதுகை மாவட்டம் மேடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் மணிகண்டன், அகிலா. இவர்களின் 3 மாத குழந்தைக்கு உடல் சரியில்லாததால், துவரங்குறிச்சி உள்ள தனியார் மருத்துவமனைக்கு பைக்கில் சென்று திரும்பியுள்ளனர். அப்போது சேத்துப்பட்டியில் சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

News February 25, 2026

ஸ்ரீரங்கத்தில் யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

image

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் எனப்படும் மாசி தெப்ப உற்சவத்தில் 6-ம் நாளான இன்று (பிப்.24) மாலை ஸ்ரீ நம்பெருமாள், யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!