News June 28, 2024
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலர் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு விதமான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News December 14, 2025
கள்ளக்குறிச்சி: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <
News December 14, 2025
கள்ளக்குறிச்சி: துப்பாக்கி வைத்திருந்தவருக்கு வலைவீச்சு!

கள்ளக்குறிச்சி: விரியூரில் ஒருவர் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன்பேரில், உதவி ஆய்வாளர் பிரதாப் குமார் தலைமையிலான போலீசார் நேற்று (டிச.13) அறிவு என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, ஒரு நாட்டுக்குப்பாக்கி மற்றும் சல்பர், பால்ரஸ், உப்பு கரி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய அறிவை போலீசார் தேடி வருகின்றனர்.
News December 14, 2025
கள்ளக்குறிச்சி: சொந்த ஊர் திரும்பியவருக்கு ஏற்பட்ட சோகம்!

கள்ளக்குறிச்சி: ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (32), சிங்கப்பூரில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த வாரம் ஊருக்கு வந்த நிலையில், நேற்று தனது பைக்கில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுள்ளார். அப்போது, சாலையோர எச்சரிக்கை பலகை மீது மோதியதில் படுகாயமடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


