News April 19, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

image

விழுப்புரம் கோட்ட அளவில், ஏப்ரல் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22.04.2025 அன்று காலை 11 மணியளவில், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து விவசாய பிரதி நிதிகளும் தவறாது கலந்துகொள்ளலாம்.

Similar News

News November 10, 2025

விழுப்புரம்: உங்களிடம் G Pay / PhonePe / Paytm இருக்கா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News November 10, 2025

விழுப்புரம்: மின்சாரத்தில் பிரச்னையா..? உடனே CALL!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் வீட், பகுதியில் மின்சாரத்தில் தடங்கல், பராமரிப்பின்மை, அதீத கட்டணம், அதிக நேர மின் தடை போன்ற மின்சாரம் சார்ந்த எவ்வித குறைகளையும் தெரிவிக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கட்டணமில்லா எண்ணான 1800-425-6000 என்ற எண்ணை அழைக்கலாம். உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

விழுப்புரம்: குளத்தில் மூழ்கி இளைஞர் பலி!

image

விழுப்புரம்: வானூர் வட்டம், குயிலாப்பாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்த மு.தமிழ்பிரியன்(28). திருமணமாகாத இவர், கொடைக்கானலில் தனியார் விடுதியில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தமிழ்பிரியன் கடந்த சனிக்கிழமை அங்குள்ள குளத்தில் குளித்துள்ளார். அப்போது குளத்தின் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!