News March 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாகராஜன் அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர். இதில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 9, 2025

தஞ்சை நீதிமன்றம் அதிரடி

image

செங்கிப்பட்டியில் கடந்த 2020ம் ஆண்டு சத்தியபாமா என்ற பெண்ணிடம் 10 சவரன் தாலி செயினை வழிப்பறி செய்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருச்சியை சேர்ந்த சண்முகம் (35), அருள் (38) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று‌ வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News November 9, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 8, 2025

தஞ்சாவூர்: மாணவனுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய பாலசுப்பிரமணியன் (29), எட்டாம் வகுப்பு மாணவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் பெற்றோர் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நேற்று முன்னாள் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!