News March 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மார்ச் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமையான இன்று (மார்ச் 28) காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க…

Similar News

News April 1, 2025

பிரிந்த தம்பதியரை இணைக்கும் ஆலந்துறையார் கோயில்

image

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ளது, அருந்தவ நாயகி உடனாய ஆலந்துறையார் கோயில். இங்குள்ள மூலவர் ஆலந்துறையார், அருந்தவநாயகி ஆவர். சிவபெருமானை பிரிந்து சென்ற பார்வதி தேவி இங்கு தவம் செய்து மீண்டும் சிவபெருமானுடன் சேர்ந்தார். ஆகையால் இங்கு வழிபட்டால் பிரிந்த தம்பதியரும் சேருவர் என கூறுகின்றனர். மேலும் இங்கு வழிபட்டால் மாத்ருஹத்தி தோஷம், திருமணத் தடை போன்றவையும் நீங்கும் என்கின்றனர். இதை பகிரவும்

News April 1, 2025

அங்கன்வாடி ஆசிரியராக இலவச பயிற்சி!

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <>இங்கு கிளிக் செய்து<<>> அறியலாம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்…

News April 1, 2025

ஜெயங்கொண்டம்: மூதாட்டியை தாக்கிவிட்டு திருட்டு முயற்சி

image

ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் (42). இவர் கூலி வேலைக்காக மேலமைக்கேல்பட்டி கிராமத்திற்கு சென்றபோது, அங்குள்ள ஒரு வீட்டில் திருடுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் இருந்த 95 வயது மூதாட்டி சத்தமிட்டு உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். இதனால் அந்த மூதாட்டியை தாக்கியுள்ளார்.அப்போது பொதுமக்களே அவரை பிடித்து கட்டி வைத்து தா.பழூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!