News July 26, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தலைமையில் இன்று நடைபெற்றது. ‘விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் மீது 10 முதல் 15 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் பதிலளிக்க வேண்டும்’ என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

Similar News

News March 4, 2026

சேலத்தில் திமுக-வில் கூண்டோடு இணைந்தனர்

image

அதிமுக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழகத்தில் பெரும் பேசும் பொருளான நிலையில், பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சேலம் மாநகர மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளர் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

News March 4, 2026

கன்னங்குறிச்சி அருகே இளம்பெண் விபரீத முடிவு!

image

சேலம் சின்ன திருப்பதி சந்திரன் கார்டன் பகுதியைச் சேர்ந்த மணியின் மகள் தேவிகா (20). இவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கன்னங்குறிச்சி போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் சரியாக வேலை செய்யாததால் தந்தை மணி அவரைத் திட்டியதாகவும், இதனால் மனமுடைந்த தேவிகா விபரீத முடிவை எடுத்ததும் தெரியவந்தது. போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 4, 2026

வாழப்பாடி அருகே விபத்து; ஒருவர் பலி

image

அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ (31). இவர் சேலத்தில் தனியார் எலக்ட்ரிக் கடையில் லோடுமேனாக பணிபுரிகிறார். நேற்று காலை, வாழப்பாடி மகேஸ்வரி தியேட்டர் அருகே தம்மம்பட்டி சாலையோரம் நடந்து சென்றபோது, வாழப்பாடி நோக்கி தண்ணீர் டேங்க் இழுத்துச் சென்ற டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த இளங்கோ மருத்துவமனைடில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரணை.

error: Content is protected !!