News October 25, 2024

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் உதவி

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (ஆக்.25) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.49.52 லட்சம் மதிப்பில் பள்ளத்தூர் மற்றும் கூத்தலூர் தொடக்க கூட்டுறவு வங்கி சார்பில் வட்டியில்லா கடன் உதவியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் வழங்கினார். மேலும் விவசாயிகளுக்கு டான்பெட் மானிய விலையில்லா தரமான உரங்களையும் வழங்கினார். இதில் கூட்டுறவு துறை அலுவலர் மண்டல இணைபதிவாளர் ராஜேந்திரன் பிரசாத் உடன் இருந்தனர்.

Similar News

News January 30, 2026

சிவகங்கை: EXAM இல்லை… போஸ்ட் ஆபீஸ் வேலை

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1. வகை: மத்திய அரசு

2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)

3. வயது: 18-40

4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380

5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி

6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)

7.மேலும் தகவலுக்கு<>: CLICK HERE.<<>>

இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 30, 2026

சிவகங்கை: பேருந்தில் நகை திருடிய பெண்கள் கைது

image

கோட்டையூரை சேர்ந்தவர் கவுசல்யா. காரைக்குடிக்கு டவுன் பஸ்சில் சென்றுள்ளார். அப்போது அழகப்பா பல்கலை அருகே வந்தபோது இவருக்கு அருகில் இருபெண்கள் நின்றுள்ளனர். அதற்கு பின் அழகப்பா கல்லூரியில் இறங்கி பார்த்தபோது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கவுசல்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி, ஷாலினி இருவரையும் கைது செய்தனர்.

News January 30, 2026

சிவகங்கை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்! APPLY NOW

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<> https://tnuwwb.tn.gov.in/<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!