News July 9, 2025

விவசாயிகளுக்கு ரூ.7.87 கோடி மானிய உதவி

image

விழுப்புரம் மாவட்டத்தில் நெல் சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ.7.87 கோடி மானிய உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 ஆயிரத்து 918 ஏக்கர் பரப்பில் நெல் உற்பத்திக்கு, மானிய உதவி வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டம், செயல்படுத்தப்படுகிறது என வேளாண் துறை அறிவித்துள்ளது.

Similar News

News September 22, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.21 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 22, 2025

மரக்காணத்தில் UPSC ஊக்குவிப்புப் பயிற்சி முகாம்

image

இந்திய ஆட்சிப் பணி (UPSC) தேர்வர்களுக்கான ஊக்குவிப்புப் பயிற்சி முகாம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட விழிப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர் குமரவேல் ஒருங்கிணைத்த இந்தப் பயிற்சி முகாமை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தொடங்கி வைத்துப் பேசினார். துணை கண்காணிப்பாளர் உமாதேவி, ஆய்வாளர் பரணிநாதன், பயிற்சியாளர் அழகு முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News September 21, 2025

இரா.லட்சுமணன் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாமகவினர்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாமக தொண்டர்கள் சதீஷ் தலைமையில் 25 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், திமுக செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

error: Content is protected !!