News January 31, 2025
விவசாயிகளுக்கு ரூ.489.22 கோடி பயிர் கடன்- ஆட்சியர் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கடந்த 30.12.2024 வரை நெல், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட 48,797 விவசாயிகளுக்கு ரூ.489.22 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருப்பு இல்லை. கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 5.892 குவிண்டால் சர்க்கரை இருப்பு உள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News November 17, 2025
தருமபுரி: கடன் தொல்லை நீங்க இங்கே செல்லுங்கள்

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில் உள்ளது. கடன் தொல்லை உள்ளவர்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் இந்த இறைவனை தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், கடன் தொல்லையால் அவதி அடைந்தவர்கள் இங்கு சென்று வழிபட்டதால் தற்போது நல்லவாழ்வு வாழ்வதாக கூறுகின்றனர். கடன் தொல்லை உள்ளவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
தருமபுரி: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

தருமபுரி: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 17, 2025
தருமபுரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க


