News February 25, 2026
விவசாயிகளுக்கு முக்கிய ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மத்திய-மாநில அரசுகளின் சலுகைகளை பெற விவசாயிகள் தங்களுடைய நில உடமைகளை பதிவு செய்து, அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இதற்கு வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் கொடுத்து பதிவு செய்யலாம்.” என அறிவித்துள்ளார்.
Similar News
News February 27, 2026
தஞ்சை பெரிய கோயிலில் திரை பிரபலங்கள்!

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை நாடுகளான கேரளா, கர்நாடக மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நடிகர் ஆதி தனது மனைவியும் நடிகையுமான நிக்கி கல்ராணியுடன் நேற்று (பிப்.26) தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தனர்.
News February 27, 2026
தஞ்சை: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் இன்று (பிப்.27) தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 100க்கும் அதிகமான இடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News February 27, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.26) இரவு 10 முதல் இன்று (பிப்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


