News October 23, 2024
விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மல்லசமுத்திரம், புதுசத்திரம், ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் முக்கிய தோட்டக்கலை பயிரான சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், ரபி சிறப்பு பருவத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய, வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 20, 2024
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 8 கி.மீ., 8 கி.மீ. மற்றும் 6 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News November 20, 2024
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
நாமக்கல், கொல்லிமலையில் தொடர்மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள பெருக்கால் அருவியின் அடிவாரப்பகுதியில் நெருங்க முடியாத அளவிற்கு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
News November 19, 2024
நாமக்கல் மாநகராட்சி நாளை சிறப்பு மருத்துவ முகாம்
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது அதன் தொடர்ந்து நாளை புதன்கிழமை காலையில் 9:30 மணிக்கு வார்டு எண்.1 பெரிய அய்யம்பாளையம் மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.8 கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.