News December 7, 2024

விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

image

வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சம் ரூ.1.20 லட்சம், விசைகளை எடுக்கும் கருவிகளுக்கு அதிகபட்சம் ரூ.63 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீத இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர் , பழங்குடியினர், பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட மொத்த விலையில் 40% மானியமாக வழங்கப்படுகிறது.

Similar News

News April 13, 2026

திருச்சுழி அருகே கட்சி தாவிய நிர்வாகிகள்!

image

நரிக்குடி அருகே துய்யனூர் மற்றும் உவர் புளியங்குளம் கிராமங்களைச் சேர்ந்த மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாற்று இளைஞர்கள் இன்று திமுகவில் இணைந்தனர். திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தெற்கு ஒன்றிய செயலாளர் இசலி ரமேஷ் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

News April 13, 2026

விருதுநகரில் இன்று வாக்கு பதிவு தொடக்கம்!

image

விருதுநகரில் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த 49 குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று 13.04.2026 முதல் 17.04.2026 வரை வீடுகளுக்கே சென்று வாக்குகளை பெறவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சுகபுத்ரா தெரிவித்துள்ளார். 7 சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 2008 மூத்த குடிமக்கள், 1845 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்களிக்க விண்ணப்பங்களை வழங்கியுள்ளனா்.

News April 12, 2026

விருதுநகர் மக்களே இனி அலைச்சல் இல்லை

image

விருதுநகர் மக்களே இனி பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம். அதில்,
1) பான்கார்டு: NSDL
2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!