News May 22, 2024
விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

குன்னத்துரைச் சேர்ந்த விவசாயிகள் முருகன் (72), ஆறுமுகவேல் (54), ரவி (44) நெல்லை கடையில் நெல் விதையை வாங்கி பயன்படுத்தினர். அது நெட்டை, குட்டையாக வளர்ந்து மகசூல் தரவில்லை. அவர்கள் வக்கீல் பிரம்மா மூலம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மதுரை மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் எதிர்மனுதாரர் மேல் முறையீடு செய்தார். அதை தள்ளுபடி செய்ததுடன் விவசாயிகளுக்கு ரூ.2,05,000 வழங்க உத்தரவிட்டது.
Similar News
News September 16, 2025
நெல்லை உங்களுடன் ஸ்டாலின் முகாம் – கலெக்டர் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை வி.எம் சத்திரம் சண்முக மஹால், வள்ளியூர் எம்.எஸ்.மஹால், கோடீஸ்வரன் நகர் ஜெயம் மஹால், இட்ட மொழி பெருமாள் தங்கவேல் ஜெயராஜ் மண்டபம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி சமுதாயம் நலக்கூடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.
News September 16, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்.15) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News September 15, 2025
நெல்லை உழவர் நல சேவை மையம் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் 30 சதவீத மானியத்தில் 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் படித்த இளைஞர்கள் முன் வரலாம். தகுதியானவர்கள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.