News March 21, 2025
விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிளை வழங்கிய ஆட்சியர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (21.03.2025) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்,இ.ஆ.ப., விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் ப.சிவானந்தம், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கந்தராஜா ஆகியோர் உள்ளனர்.
Similar News
News April 15, 2025
கரூரில் மழை பெய்யப் போகிறதாம் குடை முக்கியம்

கடலோர ஆந்திரபிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஒரு இடங்களிலும், கனமான மழையும் லேசான மழையும் மற்றும் கரூர் மாவட்டங்களில் பல பகுதியில் இன்று (ஏப்ரல் 15) இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 15, 2025
ஒரு க்ளிக் உங்க பணம் காலி சைபர் கிரைம் எச்சரிக்கை!

கரூர் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)
News April 14, 2025
கரூர்: கடன் தீர்க்கும் ஈசன்!

கரூர்: பஞ்சப்பட்டியில் உள்ள மதுராந்தகேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் திருநீறு கலந்து கொடுக்கப்படும் மருந்துப் பிரசாதம் எந்த வித நோயையும் தீர்க்கும் தன்மை கொண்டதாம். மேலும், இங்கு தொடர்ந்து 21 நாட்கள் விளக்கேற்றி வழிபட்டால் கடன் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!