News December 25, 2024

விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய  ஆட்சியர் 

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன்   நேற்று  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் சார்பாக துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர் வட்டங்களைச் சார்ந்த விவசாயிகளுக்கு ரூ  43 லட்சம் மதிப்பீட்டில் 6 பவர் டில்கர், 3 மினி டிராக்டர், 600 மணிலா விதை விதைக்கும் வேளாண் இயந்திரங்களை வழங்கினார். உடன் ஐசிஐசிஐ வங்கி மண்டல மேலாளர் நாராயணன் மாவட்ட மேலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News July 11, 2025

திருவண்ணாமலை ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப்4 தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி தி.மலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குரூப் 4 தேர்வுகள் நடைபெறும் மையத்தின் தலைமை கண் காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு மைய ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், 9 மணிக்கு மேல் தாமதமாக வரும் என்தவொரு தேர்வரையும் தேர்வு மையத்தில் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News July 11, 2025

தி.மலை மாவட்ட DEO-க்கள் இடமாற்றம்

image

தமிழக கல்வித்துறையில் பணிபுரியும் மாவட்ட கல்வி அலவலர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். அதன்படி, தி.மலை இடைநிலை கல்வி அலுவலராக பணியாற்றிய காளிதாஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ப.ஜோதிலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தி.மலை தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சி.ப.கார்த்திகேயன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏ.சுகப்பிரியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். *நண்பர்களுக்கு பகிருங்கள்*

News July 11, 2025

கிரிவலம் சென்ற தெலங்கானா பக்தா் கொலை: இருவா் கைது

image

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தெலங்கானாவை சேர்ந்த வித்தியாசாகா்(32) என்பவர் (ஜூலை.07) அன்று கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு, அவரிடம் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்தசம்பவத்தில், தி.மலைச் சோ்ந்த குகனேஸ்வரன்(21), தமிழரசன்(25) ஆகியோரை போலீஸாா் நேற்று (ஜூலை.10) இரவு கைது செய்தனா். மேலும், கிரிவலம் சென்ற பக்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம், பக்தர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

error: Content is protected !!