News May 24, 2024
விவசாயிகளுக்கு திருவாரூர் கலெக்டர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பருத்தி பயிர் 39,710 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் பெய்த மழையின் காரணமாக பருத்தி வயல்களில் நீர் தேங்கி காணப்படுகிறது. நீர் தேங்கி இருப்பதால் பருத்திப் பயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்திட அதற்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி நீரை வடிய வைத்து பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News September 7, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,6) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 6, 2025
திருவாரூர்: கோழிப்பண்ணை அமைக்க மானியம்

திருவாரூர், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
திருவாரூர்: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள்<