News October 23, 2024

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

image

ஆலத்தூர், நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள் தனது நிலத்தில் பட்டு வளர்ச்சி துறை ஆலோசனைப்படி 3000 மல்பெரி செடிகளை நட்டு, பயிர்களுக்கு இலவச காப்பீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதனிடையே மல்பெரி பயிர்கள் மழையினால் சேதம் அடைந்தன. ஆனால் பட்டு வளர்ச்சித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகளுக்கு ரூ.50,000 இழப்பீடு நுகர்வோர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Similar News

News January 6, 2026

பெரம்பலூர் :புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அனிதா இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்போவதாக அவர் தெரிவித்தார். புதிய எஸ்பி-க்கு காவல்துறை உயர் அலுவலர்களும், பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

News January 6, 2026

பெரம்பலூர்: சகல செல்வங்களும் கிடைக்க இங்க போங்க!

image

பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தில் அமைந்துள்ள கல்லணை ஏமபுரி கோயில், அணைத்து மங்கள நிகழ்வுகள் மற்றும் சகல செல்வங்கள் கிடைக்கும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவருக்கு பொங்கல் வைத்து, அபிஷேகம் செய்து, மனமுருகி வழிபட்டால், சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 6, 2026

பெரம்பலூர்: 10th போதும் அரசு வேலை!

image

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!