News April 10, 2025
விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க பரிந்துரை

செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக்கு, 1,217 ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் பயிர் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க, அரசுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பரிந்துரை செய்துள்ளார்.
Similar News
News April 19, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து போலீசார் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (ஏப்ரல் 18) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆபத்து நேரங்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை பொதுமக்கள் அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவு தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*
News April 18, 2025
தவெக செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் யார்?

தமிழக வெற்றி கழகம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் இன்னும் நியமிக்கப்படாததால், தலைமை யாரை நியமிக்கும் என்று தொண்டர்கள் அதிக எதிர்பார்பில் உள்ளனர். பல ஆண்டுகளாக விஜயை முன்னிலைப்படுத்தி பல நற்பணிகள் செய்து வரும் தையூரில் வசித்து வரும் மேஷாக் மாவட்ட செயலாளராக விரைவில் நியமிக்கப்படலாம் என்று அப்பகுதி தொண்டர்கள் பேசிவருகின்றனர்.
News April 18, 2025
செங்கல்பட்டு: வீட்டில் தங்கம் சேர செல்ல வேண்டிய கோவில்

செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி சுயம்புவாகத் தோன்றியதாக சொல்லப்படுகிறது. பல்வேறு வேண்டுதலுக்காக இக்கோவிலுக்கு பக்தர்கள் குவிகின்றனர். அதில், முக்கியமாக இங்குள்ள நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க நகைகள் சேரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. *நகை சேர்க்க விரும்பும் நண்பர்களுக்கு பகிரவும்*