News January 31, 2025
விவசாயிகளுக்கு இன்று கடைசி நாள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வேளாண்மை துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு இன்று (31-01-2025) கடைசி நாள் என்பதால் மாவட்டத்தில் உள்ள காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளை மாலைக்குள் தங்களின் பயிர்களை காப்பீடு செய்ய மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News March 2, 2026
திருப்பத்தூர்: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் ஜோலார்பேட்டையில் இருந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பால்னாங்குப்பம் கூட்டு ரோடு அருகே பின்னால் வந்த கார் சைக்கிள் மீது மோதியதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று (மார்.1) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News March 2, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 1, 2026
திருப்பத்தூர் : அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க


