News October 18, 2025
விவசாயிகளுக்கான மானியம் ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை விளைப் பொருட்களுக்கான மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார் சேலத்திற்கு ரூபாய் இரண்டு கோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் (http://www.agrimark.in.gov.in/)இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்
Similar News
News October 18, 2025
சேலம் வழியே புதிய ரயில் சேவை தொடக்கம்!

இந்திய ரயில்வேயால் இயக்கப்படும், அதிவிரைவு ரயில்வே சேவையான அம்ரித் பாரத் ரயில், இந்த ரயில் சேவையானது, சென்னையிலிருந்து புறப்பட்டு, சேலம் வழியாக கோவை வரை இயக்கப்படுகிறது. குறைந்த கட்டணத்துடன், ஸ்லீப்பர் மற்றும் அதிகப்படியான முன்பதிவு அல்லாத பெட்டிகளை கொண்டு இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் முதல் இயக்கப்படுவதாக, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
சேலத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை!

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மோகன்குமார் (30), அடிக்கடி உடல்நலக்குறைவால் மனமுடைந்து நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 18, 2025
சேலம் விவசாயிகளுக்கு மானியம் கலெக்டர் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை விளைப் பொருட்களுக்கான மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். சேலத்திற்கு ரூபாய் இரண்டு கோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் (http://www.agrimark.in.gov.in/) இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.SHAREit