News March 28, 2026

விவசாயக் கடன் தள்ளுபடி.. டிடிவி வாக்குறுதி

image

120 வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை டிடிவி வெளியிட்டுள்ளார். * விவசாயக் கடன் தள்ளுபடி *மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் * பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் * ஆண்கள் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டு நிதி வழங்கப்படும் * கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படும் * அரசு, தனியார் நிறுவனங்களில் 85% தமிழர்கள் பணி புரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 5, 2026

பாகிஸ்தானுடனா கூட்டணி வைச்சோம்? செல்லூர் ராஜு

image

ஜெ., கடுமையாக எதிர்த்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதாக CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தாங்கள் பாஜகவுடன் தானே கூட்டணி வைத்துள்ளோம், பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்திருக்கிறோம் என செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். திமுக கூட்டணி வச்சா இனிக்கிது, நாங்க தோழமை பாராட்டுனா கசக்குதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 5, 2026

விடுமுறை.. தமிழக அரசு கூடுதல் பஸ்கள் அறிவிப்பு

image

புனித வெள்ளி, வார விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல 2,257 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது, ஊர்களுக்குச் சென்றவர்கள் விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு திரும்ப ஏதுவாக, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இன்று கூடுதல் பஸ்களை அரசு போக்குவரத்துத் துறை இயக்கி வருகிறது. TNSTC செயலி (அ) <>இணையதளத்தில்<<>> டிக்கெட்களை முன்பதிவு செய்து பயணத்தை ஈசியாக்குங்கள் நண்பர்களே!

News April 5, 2026

மேலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன்

image

27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ், மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் MP விஸ்வநாதன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கார்த்தி சிதம்பரம் ஒருவரையும், மாணிக்கம் தாகூர் மற்றொருவரையும் வேட்பாளராக கைகாட்டியதால் இழுபறி ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

error: Content is protected !!