News August 14, 2025

விழுப்புரம்: B.Sc,BCA, MSc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில் <<>>வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 16, 2025

திருட முயன்ற பைக் திருடனைப் பிடித்த பொதுமக்கள்

image

விழுப்புரத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை இருவர் திருட முயன்றனர். அதிகாலை 5:00 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், பொதுமக்கள் ரூபனை என்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரில் ஒருவரான சந்தோஷ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். விழுப்புரம் போலீசார் ரூபனைக் கைது செய்ததுடன், தப்பியோடிய சந்தோஷையும் தேடி வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வு காரணமாக ஒரு திருடன் பிடிபட்டுள்ளான்.

News August 16, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100-ஐ அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

விழுப்புரம் சிறந்த மல்லர் கம்ப பயிற்சியாளர் விருது

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி அருகே உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு திடலில் இன்று (ஆக.15) 79-வது சுதந்திர தின விழாவில் கொண்டாடப்பட்டது. இதில் விழுப்புரத்தை சேர்ந்த ஆதி என்பவருக்கு சிறந்த மல்லர் கம்ப பயிற்சியாளருக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வழங்க, காவல் கண்காணிப்பாளர் சரவணன், கூடுதல் ஆட்சியர் பத்மஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!