News January 2, 2026
விழுப்புரம்: 10th போதும், ரூ.37,815 சம்பளத்தில் வங்கி வேலை!

விழுப்புரம் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistanat) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள்<
Similar News
News January 3, 2026
விழுப்புரம்: பெண்களிடம் குடிமகன் தகராறு!

செஞ்சி அருகே நேற்று ஒரு வீட்டு வாசலில், லோகேஷ் (23) போதையில் படுத்திருந்தார். அவரை அங்கிருந்து போகும் படி, அந்த வீட்டின் பெண்கள் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த அவர் கம்பியால் தன்னை குத்தி காயப்படுத்திக்கொண்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கிராம பெண்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள மதுபான கடையை முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதும் கலைந்து சென்றனர்.
News January 3, 2026
விழுப்புரம்: பள்ளிவேன் மோதி 2 வயது குழந்தை பலி!

விழுப்புரம்: நெமிலியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது 2 வயது மகன் ருத்தீஷ்குமார், நேற்று வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, அங்கு வந்த பள்ளி வேன் மாணவர்களை இறக்கி விட்டுவிட்டு, திரும்பியுள்ளது. அப்போது வேன் குழந்தை மீது மோதியதில், குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்த புகாரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 3, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி போலீசாரின் விவரம்!

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” நேற்று இரவு – இன்று (ஜன.03) காலை வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேளம், அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்!


