News February 23, 2026
விழுப்புரம்: 10 நாளில் கல்யாணம் – பறிபோன உயிர்!

விழுப்புரம்: செஞ்சியில் உள்ள தனியார் வங்கியில் கரூரைச் சேர்ந்த லோகேஷ்குமார் (24) பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அடுத்த மாதம் 5ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பைக்கில் கரூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது, விக்கிரவாண்டி அருகே பைக் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News February 25, 2026
15 வட்டாட்சியர்கள் அதிரடி பணியிடை மாற்றம்

சட்டப்பேரவைத் தேர்தல் 2026 நடைபெற உள்ள நிலையில் ஒரே வட்டாட்சியர் அலுவலகத்தில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வரும் வட்டாட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 15 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் இன்று பிப்.25ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News February 25, 2026
விழுப்புரம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<
News February 25, 2026
வருவாய்த் துறையினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலை அலுவலா்களுக்கும் உழைப்புக்கேற்ற மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும். என உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வருவாய்த் துறை சங்கங்களின் கால வரையற்ற வேலை நிறுத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது.


