News May 12, 2024

விழுப்புரம்: 1 எஸ்ஐ, 3 ஏட்டுகள் இடமாற்றம்

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி மதுவிலக்கு சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மது கடத்தியவர்களிடம் வழக்கு பதிவு செய்யாமல் ரூ.7000 லஞ்சம் பெற்றதாக புகார் வந்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் தலைமை காவலர்கள் நாகராஜ், புஷ்பராஜ் சுரேஷ் ஆகிய நான்கு பேரும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News July 5, 2025

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

image

திண்டிவனம் சந்தைமேடு புறவழிச்சாலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான எட்டியம்மன் கோவில் முன் பகுதியில் பூட்டு போட்டு வைத்திருந்த உண்டியலை கடப்பாறையால் உடைத்து அதில் இருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் நேற்று இரவில் திருடி சென்றனர். சில நாட்களுக்கு முன் அம்மன் கழுத்தில் கிடந்த 3 கிராம் தங்க தாலி திருடு போன நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 5, 2025

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு

image

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர் தோழர் ஆர். கலியமூர்த்தி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உடன் மாவட்ட துணை செயலாளர் பாலசுப்ரமணியன் மாவட்டத் தலைவர் எம்.ஐ சகாபுதீன் கலந்து கொண்டனர் .

News July 4, 2025

விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 4) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!