News May 4, 2024

விழுப்புரம் வீடூர் அணை பற்றிய தகவல்!

image

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே அமைந்துள்ளது இந்த வீடூர் அணை. 1959 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை மறைந்த முதல்வர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இவ்வணையின் மொத்த நீளம் அகலம் முறையே 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும்.

Similar News

News August 26, 2025

விழுப்புரம்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா…?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<> இங்கு க்ளிக் <<>>செய்து Grievance Redressal, விழுப்புரம் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க…

News August 26, 2025

விழுப்புரம் ஆட்சியர் பெண்களுக்கு அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்கள், தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க தமிழக அரசின் சார்பில் ரூ. 5,000 மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தைப் பெற தகுதியுள்ள பெண்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

விழுப்புரம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025

image

விழுப்புரம், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025 – கால்பந்து போட்டியை இன்று ஆக.26 விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தொடக்கி வைத்தனர். உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!