News May 14, 2024
விழுப்புரம்: விபத்தில் போலீஸ் உள்பட் 4 பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே நள்ளிரவில் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நின்றுகொண்டிருந்த டாட்டா ஏசி வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காவலர் உட்பட நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் திண்டிவனம்-சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Similar News
News February 4, 2026
விழுப்புரம்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

விழுப்புரம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News February 4, 2026
விழுப்புரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News February 4, 2026
விழுப்புரம் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

தாம்பரத்தில் இருந்து காலை 9. 40 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமுரயில் திண்டிவனம் – மயிலம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக பிப்ரவரி 5 ,7, 10 ஆகிய தேதிகளில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். அதேபோல் விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு மதியம் 1:30 மணிக்கு செல்லும் ரயில் விழுப்புரத்திற்கு பதிலாக திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


