News August 27, 2025

விழுப்புரம்: விநாயகர் சதுர்த்திக்கு இதை பண்ணுங்க

image

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று பக்திபூர்வமாக கொண்டாடப்படுகின்றது. புதன்கிழமையில் வரும் சதுர்த்தி சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ▶வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் பன்னீர், தீர்த்தால் சுத்தம் செய்ய வேண்டும். ▶மலர்களுடன் கோலமிட்டு வைக்க வேண்டும். ▶அருகம்புல், எருக்கம்பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும். வழிபாட்டிற்கு சிறந்த நேரம் காலை 7:45–8:45,10:40–1:10, மாலை 5:10–7:45ஷேர் பண்ணுங்க

Similar News

News August 27, 2025

திருமணம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் 3 பேர் பலி.

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். செப். 4 அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற தாய், தந்தை, மகன் ஆகியோர் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய த.வெ.க. நிர்வாகியான கார் ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

News August 27, 2025

விழுப்புரம்: உங்கள் நிலத்தை கண்டுபுடிக்க இதோ வழி

image

விழுப்புரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க<> க்ளிக்<<>> பண்ணி LOGIN செய்து விழுப்புரம் மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க.ஷேர்

News August 27, 2025

விழுப்புரம்: வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை ஆகஸ்ட் 28 காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்பு நடக்க இருக்கிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!