News August 27, 2025
விழுப்புரம் லாட்ஜில் விபச்சாரம் செய்த மேலாளர் கைது

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் சுற்றியுள்ள சில லாட்ஜ்களில் விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. புகாரின் பேரில் விழுப்புரம் போலீசார் நேற்று ஆக.26 நள்ளிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரபல லாட்ஜில் சோதனையிட்டபோது 2அழகிகளை வைத்து மேலாளர் தட்சணாமூர்த்தி (45) விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேலாளர் மற்றும் அவருடன் இருந்து இருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 27, 2025
திருமணம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் 3 பேர் பலி.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். செப். 4 அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற தாய், தந்தை, மகன் ஆகியோர் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய த.வெ.க. நிர்வாகியான கார் ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News August 27, 2025
விழுப்புரம்: உங்கள் நிலத்தை கண்டுபுடிக்க இதோ வழி

விழுப்புரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க<
News August 27, 2025
விழுப்புரம்: வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை ஆகஸ்ட் 28 காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்பு நடக்க இருக்கிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.