News December 13, 2025
விழுப்புரம்: ரேஷன் கார்டில் திருத்தமா? உடனே அணுகுங்கள்!

விழுப்புரத்தில், பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் இன்று (டிசம்பர்-13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய குடும்பஅட்டை விண்ணப்பித்தல்,பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரிமாற்றம், நகல் அட்டை, செல்போன் எண் பதிவுமாற்றம் & குறைபாடுகள் தொடர்பான மனுக்கள் பெறப்படும். ஷேர்!
Similar News
News December 13, 2025
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்ப்பு

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் பெல் நிறுவன பொறியாளர்களால் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்ப்புக்கு உட்படுத்தும் பணியினை விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (டிச.13) நேரில் பார்வையிட்டார்.
News December 13, 2025
விழுப்புரத்தில் தொழிற்கடன் விழிப்புணர்வு முகாம்

தொழிற்கடன் விழிப்புணர்வு முகாம் (டிச.17) காலை 10 மணியளவில் ASG மஹால், புதிய பேருந்து நிலையம் எதிரில், சுதாகர் நகர், விழுப்புரத்தில் நடத்தப்படவுள்ளது. இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், நேரடியாகவோ 9443728015 / 8925534035 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
விழுப்புரம்: மத்திய அரசில் வேலை, ரூ.56,900 சம்பளம்! APPLY NOW!

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த லிங்கை <


