News September 13, 2025
விழுப்புரம்: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. வட்டாச்சியர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 13, 2025
விழுப்புரம்: கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு…

விழுப்புரம் மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்யவேண்டும் என்பது விதி. ஆனால், பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!
News September 13, 2025
விக்கிரவாண்டி: வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை!

விக்கிரவாண்டி, ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு(33). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மஞ்சு நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 9ம் தேதி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனே சென்னை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று (செப்.12) உயிரிழந்தார். விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 13, 2025
விழுப்புரம்: டிகிரி போதும், ரிசர்வ் வங்கியில் வேலை!

விழுப்புரம் மக்களே, ரிசர்வ் வங்கியில் கிரேட்-பி பிரிவில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.55,200-ரூ.99750 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21-30. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30 வரை <