News November 24, 2025

விழுப்புரம்: ரூ.2000 பணத்திற்காக தாக்கப்பட்ட வாலிபர்!

image

விழுப்புரம்: மணி நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது தாய் ரேகா, வி.மருதுாரைச் சேர்ந்த சற்குணம் என்பவரிடம் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ரூ.10,000 வாங்கியுள்ளார். இதில் ரூ. 8,000 திருப்பி தந்த நிலையில், மீதம் ரூ. 2,000 தர வேண்டியிருந்தது. மீதி பணத்தை சற்குணத்தின் பேரன் பாலாஜி நேற்று முன்தினம் விக்னேஷிடம் கேட்டு பயங்கரமாக தாக்கியுள்ளார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News November 24, 2025

விழுப்புரம்:குறைகேட்பு கூட்டத்தில் குவிந்த 443 மனுக்கள்

image

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக கொடுப்பது வழக்கம் அந்த வகையில் இன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கொட்டும் மழையிலும் மனுகொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். குறைகேட்பு கூட்டத்தில் 14 மாற்றுத்திறனாளிகள் 443 மனுக்கள் குவிந்தது. ஆட்சியர் மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

News November 24, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஆய்வு

image

(74)விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விழுப்புரம் நகராட்சி மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணி நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், அவர்கள் இன்று (நவ.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News November 24, 2025

விழுப்புரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க

error: Content is protected !!