News April 24, 2025
விழுப்புரம் – ராமேஸ்வரம் இடையே கோடை கால சிறப்பு ரயில்

விழுப்புரம் – இராமேஸ்வரம் கோடை கால சிறப்பு ரயில் விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும். ரயில் வண்டி எண் (06105) காலை 6.35 மணிக்கு திருச்சிக்கும், 7.50 மணிக்கு திண்டுக்கல்லுக்கும், 9.10 மணிக்கு மதுரை வந்தடையும். அங்கிருந்து மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு 11.40 மணிக்கு சென்று சேரும். அதே நாட்களில் (06106) இராமேஸ்வரத்திலிருந்து இரவு 11மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
Similar News
News April 25, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் இன்று (ஏப்ரல் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
News April 25, 2025
பாஜக மகளிர் அணி சார்பாக புகார் மனு

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இராமநாதபுரம் பாஜக மகளிர் அணி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் சமூக வலைதளங்களில் பஹல்காம் சம்பவத்தில் இந்திய ராணுவத்தை இழிவு படுத்தியும், பிரதமரை தொடர்பு படுத்தியும் பேசிய சுந்தரவல்லி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் தெரிவித்துள்ளனர்.
News April 24, 2025
நாளை வேலைவாய்ப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மாதாந்திர சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (25.04.2025) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கல்வித்தகுதி 8th/ 10th / +2/ ஐ.டி.ஐ/ டிப்ளமோ/ பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க