News July 8, 2025

விழுப்புரம்- ராமேசுவரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

விழுப்புரம்- ராமேசுவரம் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமேசுவரம் (எண் 06109) ராமேசுவரம்-விழுப்புரம் (எண் 06110) ஆகிய சிறப்பு ரயில்கள் வாரம் இருமுறையாக சனி, ஞாயிறு இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த ரயில்கள் வரும் ஜூலை 12- முதல் 27ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

Similar News

News July 8, 2025

விழுப்புரம் பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

விழுப்புரம் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <>AAVOT.COM<<>> என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்

News July 8, 2025

மு.அமைச்சரை அரசு பள்ளி ஆசிரியர்கள் சந்தித்து வாழ்த்து

image

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, இன்று ஜூலை 7ஆம் தேதி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சருமான முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ.வை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

News July 7, 2025

விழுப்புரம் எம்எல்ஏ – வை சந்தித்த அரசு பள்ளி ஆசிரியர்கள்

image

2024-2025 ஆம் ஆண்டிற்கான பேராசிரியர் அன்பழகன் விருது, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று ஜூலை 7 அன்று பள்ளித் தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

error: Content is protected !!