News March 22, 2024

விழுப்புரம்: மு.அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது, முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட மூன்று அவதூறு வழக்குகள் விழுப்புரம் நீதித் துறை நடுவர் மன்றம் எண் 1-இல் தொடுக்கப்பட்டது. நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டாா்.

Similar News

News February 3, 2026

விழுப்புரம் வருகிறார் முதலமைச்சர்!

image

திண்டிவனத்திற்கு நாளை வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க எம்.எல்.ஏ மஸ்தான் அழைப்பு விடுத்துள்ளார். திண்டிவனம் சிப்காட் மருந்தியல் பூங்கா அருகே நாளை(பிப்.4) காலை 10:00 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட தகுதியான 10 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.

News February 3, 2026

விழுப்புரம்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.

2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க

3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.

4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.

இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க!

News February 3, 2026

JUST IN: விக்கிரவாண்டியில் தீயில் கருகி ஒருவர் பலி!

image

விழுப்புரம்: விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏகாம்பரம் தங்கி இருந்த வீட்டில் பூஜைக்கு விளக்கேற்றப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த விளக்கின் தீ வீடு முழுவதும் பற்றிப் பரவியதாகக் கூறப்படுகிறது. இதில் வீட்டில் இருந்த ஏகாம்பரம் சிக்கினார். இதில், அவருக்கு கடுமையாக தீக்காயம் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை காப்பாற்ற முயன்றும், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!