News March 24, 2024
விழுப்புரம்: முன்னாள் படை வீரர்கள் கவனத்திற்கு

தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமுள்ள விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படைவீரர் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு அசல் படைப்பணிச் சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று, தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04146-220524 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளார்.
Similar News
News January 27, 2026
விழுப்புரம்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 27, 2026
விழுப்புரம்: சரக்கு வாகனம் திருட்டு

விழுப்புரம் அருகே உள்ள லிங்கா ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவர் பல்லியனெலினூர் ரயில்வே கேட் கீப்பராக வேலை செய்து வருகிறார். இவருடைய சரக்கு வாகனம் அங்கே நிறுத்தி பூட்டி விட்டு சென்றுள்ளார். மீண்டும் மறுநாள் வந்து பார்த்தபோது அந்த வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 27, 2026
விழுப்புரம்: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

விழுப்புரம் உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT


