News September 24, 2025
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், செப்டம்பர் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் செப். 26 காலை 11 மணியளவில் நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு மனுக்களை பெறுகிறார். இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுத்து பயன் பெறலாம்.
Similar News
News September 24, 2025
‘கிராமம் தோறும் மக்கள் சந்திப்பு’

ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, ‘கிராமம் தோறும் மக்கள் சந்திப்பு’ என்ற நிகழ்ச்சியை தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அக்டோபர் 4ம் தேதி ராமதாஸ் தொடங்குகிறார்.
News September 24, 2025
விழுப்புரம்: உங்களின் குடிநீர் சுத்தமானதா? CHECK பண்ணுங்க!

உங்கள் பகுதி தண்ணீர் பாதுகாப்பானது தானா? குடிக்கவும் சமைக்கவும் ஏற்றது தானா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். விழுப்புரத்தில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் ஆய்வகங்கள் உள்ளது. அங்கு உங்கள் தண்ணீரை சுத்தமான புதிய பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டர் அளவு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த தண்ணீர் குடிக்க உகந்ததா என அங்கு பரிசோதித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஷேர்!
News September 24, 2025
விழுப்புரத்தில் ரயில் மோதி வாலிபர் பலி

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை, தண்டவாளத்தைக் கடந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (33) மீது, விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.