News September 14, 2024
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

எதிர்வரும் 17.09.2024 அன்று (செவ்வாய்கிழமை) மிலாடி நபி DRY DAY ஆக அனுசரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL1) மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 11, 2025
விழுப்புரம்:மாற்றுதிறனாளிக்கு உதவிய எஸ். ஐ: பாராட்டிய எஸ்.பி!

திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிகுடிசை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தனது சொந்த செலவில் கழிப்பறையை காவல் ஆய்வாளர் அழகிரி கட்டி கொடுத்தார். இந்த நிகழ்வை பாராட்டி, இன்று (டிச.11) விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரியை,நேரில் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
News December 11, 2025
நெடுஞ்சாலைத்துறை தலைவரை சந்தித்த விழுப்புரம் எம்பி

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இன்று(டிச.11) டெல்லியில் நெடுஞ்சாலைகள் துறை தலைவர் சந்தோஷ்குமார் யாதவ் அவர்களை சந்தித்து விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைத்தல் மற்றும் பல்வேறு பணிகள் குறித்த கோரிக்கைக் கடிதத்தை வழங்கினார். உடன் விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா பங்கேற்றனர்.
News December 11, 2025
மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களை பாராட்டு

(டிச.11) விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களை பாராட்டி ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மருத்துவர்களுக்கு கேடயத்தினை வழங்கினார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன் இந்த நிகழ்வில் இருந்தனர்.


