News March 21, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் 2.34 லட்சம் விவசாயிகள் பயன்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில், கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை 2,34,881 விவசாயிகள், தங்களது விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து பயனடைந்துள்ளனர். இதில் விழுப்புரம்-27693, திண்டிவனம்-17785, செஞ்சி-47663, அரகண்டநல்லூர்-70571, அவலூர்பேட்டை-37659, விக்கிரவாண்டி-33268, மரக்காணம்-45, வளத்தி-207 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
Similar News
News March 21, 2025
இளமங்கலத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் மேற்கு ஒன்றியம் இளமங்கலம் ஊராட்சியில் இன்று பூத் எண்.72 அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணி, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக விழுப்புரம் மாவட்ட தொழில் தகவல் நுட்ப பிரிவு நிர்வாகிகள் தலைமை தாங்கினர். இக்கூட்டத்தில் அதிமுக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News March 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <
News March 21, 2025
விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்ச்.21) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2மணி வரை நடைபெற உள்ளது. வயது: 18 – 35 வயது வரை. கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, பொறியியல், ஐடிஐ, முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 என்ற தொலைபேசி எண்களை அழைக்கவும். ஷேர் பண்ணுங்க