News January 10, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ. அறிவழகன் இன்று (ஜன.10) விழுப்புரம் மாவட்ட அனைத்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, நாளை (ஜன.11) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை கால அட்டவணை பின்பற்றி அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும். ஷேர் பண்ணுங்க
Similar News
News January 27, 2026
விழுப்புரம்: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

விழுப்புரம் உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT
News January 27, 2026
விழுப்புரம்: சினிமா பாணியில் திருடனை மடக்கிய பொதுமக்கள்!

மணலூர்பேட்டை அருகே முருக்கம்பாடி கிராமத்தில், சாந்தி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற மூவர் கும்பலை உரிமையாளர் கைகாட்டினார். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், பார்த்திபன் (25) என்ற இளைஞரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய அய்யப்பன் (19) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். கைதான பார்த்திபனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
News January 27, 2026
விழுப்புரம்: மன உளைச்சலில் விபரீத முடிவு!

விழுப்புரம் அடுத்த ஐயூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் பார்வை குறைபாடு உள்ள இவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருது குடித்த அவரை உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


