News December 9, 2024
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரி திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மழையால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் 10 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. வெள்ளத்தில் புத்தகங்கள் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், இன்று அவை பள்ளியிலேயே வழங்கப்படும். மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளி உட்பட 7 அரசுப் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை. மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள 7 பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
Similar News
News March 4, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மார்ச்-(03) இரவு 10 மணி முதல் மார்ச்- (04)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News March 3, 2026
திறனகம் சிறப்பு மாவட்ட திறன் மையங்கள் திறப்பு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழகம் சார்பில் சென்னை பசுமை வழிச்சாலை முகாம் அலுவலகம் திறக்கப்பட்டது.இந்த அலுவலகத்தை குறிஞ்சி இல்லத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக திறனகம் சிறப்பு மாவட்ட திறன் மையங்கள் திறந்து வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகம் மையத்தினை ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்