News February 18, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 17) இரவு முதல் இன்று (பிப். 18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 19, 2026
JUST IN: விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பிப்.21ம் தேதி நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறையாக, மாவட்ட ஆட்சியர் சற்று முன் அறிவித்துள்ளார். மேலும், அந்த தேதியில் பள்ளி/கல்லூரி இறுதித் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 19, 2026
விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை(பிப்.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் மாவட்டத்தை சேர்ந்த 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பிடெக் போன்ற கல்வித் தகுதி உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 19, 2026
விழுப்புரம்: துப்பாக்கியை ஒப்படைக்க அறிவுறுத்தல்!

தமிழக சட்டசபை தேர்தல் 2026 முன்னிட்டு விரைவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த உள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உரிமை பெற்ற படைக்கலன்களை (துப்பாக்கிகளை) வைத்திருப்பவர்கள் தங்களின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் உடனே ஒப்படைக்க வேண்டுமென மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


