News October 25, 2025

விழுப்புரம்: மளிகை கடையில் குட்கா பறிமுதல்!

image

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆலகிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ராமமூர்த்தி என்பவரை விக்கிரவாண்டி போலீசார் நேற்று(அக்.24) கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 3 1/4 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Similar News

News October 25, 2025

விழுப்புரம்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<> க்ளிக் <<>>செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

News October 25, 2025

மேம்பாட்டு திட்ட பணி ஆட்சியர் அப்துல் ரஹ்மான் ஆய்வு

image

விழுப்புரம் நகராட்சியில் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய நகராட்சி அலுவலகத்தை புனரமைத்து திருமணம் மண்டபம் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ப.மதுசூதனன் ரெட்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News October 25, 2025

விழுப்புரத்தில் கல்விக் கடன் வேண்டுமா..? CLICK NOW

image

விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினர் 21 – 40 வயது குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்கும் மாணவ, மாணவிகள் வெளிநாட்டு பல்கலையில் படிப்பதற்கான கடன் திட்டம் பெற www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க விழுப்புரம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!