News December 27, 2025
விழுப்புரம்: மருத்துமனையில் ஆண் சடலம்!

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பார்வையாளர்கள் தங்குமிடத்தில், 70 வயது ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவர் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், முண்டியம்பாக்கம் விஏஓ அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
Similar News
News January 2, 2026
அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி

விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில். பிரதான சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. இத்தகவல் அறித்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விழுப்புரத்தில் அடிக்கடி சாலை விபத்துகளில் மான்கள் உயிரிழப்பது தொடர்கிறது.
News January 2, 2026
விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்
News January 2, 2026
நாட்டு வெடி வீசி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் – இளைஞர் கைது!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் நந்தகோபால். இவர் திருவக்கரை பகுதியில் பட்டாசு தயாரிக்கப்படும் வெடிபொருட்களை பயன்படுத்தி வெடிகுண்டு தயார் செய்து பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் வெடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அதைத்தொடர்ந்து வானூர் போலீசார் நந்தகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


