News March 18, 2024
விழுப்புரம்: மனுக்களை பெட்டியில் செலுத்தலாம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உள்ளிட்ட அனைத்து முகாம்கள் மற்றும் கூட்டங்கள் எதுவும் நடைபெறாது என விழுப்புரம் ஆட்சியர் பழனி நேற்று அறிவித்தார். எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
விழுப்புரம்: பணியில் இருந்த காவலர் உயிரிழப்பு

விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பழனி (53) உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்தார். மேற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி, 1997–ஆம் ஆண்டில் 2–ஆம் கட்டமாக பணியில் சேர்ந்தவர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பெற்று வந்தவர் நேற்று(நவ.12) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
News November 13, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்.
News November 12, 2025
வாக்காளர் தீவிர திருத்தப் பணியினை ஆய்வு செய்த ஆட்சியர்

விழுப்புரம் நகராட்சி சுதாகர் நகர் ராஜா தேசிங்கு தெருவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணியினை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.12) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், விழுப்புரம் நகர் நல அலுவலர் பிரியா உட்பட பலர் பங்கேறறனர்.


