News December 14, 2025
விழுப்புரம்: மத்திய அரசு வேலை… ரூ.1,12,400 வரை சம்பளம்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஆர்டிஓ-வில் 764 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதி ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, இன்ஜினியர் முடித்திருந்தால் போதும், ரூ.19,900 முதல் ரூ.1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் (ம) மாற்றுத்திறனாளிகளுக்கு 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் ஜன.01 உடனடியாக இந்த <
Similar News
News December 17, 2025
அரசு மாதிரி பள்ளி கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

கெடார் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுவரும் விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்,இன்று (டிச.17 நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் தலைமை தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (மாதிரிப்பள்ளி) ஸ்ரீதர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜூ, உதவி செயற்பொறியாளர் பாலாஜி, உதவி பொறியாளர் மணிமாறன் உட்பட பலர் உள்ளனர்.
News December 17, 2025
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுவதை ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி பழைய உரக்கிடங்கு அருகில் உள்ள பகுதியில் விழுப்புரம் நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருவதை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (டிச.17) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் மோகன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் எம்.ஆர் வசந்தி கலந்து கொண்டார்.
News December 17, 2025
விழுப்புரத்தில் ஆட்சி மொழி சட்டவார விழா விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.17) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சி) (பொ) திருமதி ரா.சிவசங்கரி உட்பட பலர் உள்ளனர்.


