News September 15, 2025
விழுப்புரம்: மதுபாட்டில்களை கடத்திய முதியவர் கைது!

செஞ்சி மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் & போலீசார் நேற்று கொங்கரம்பட்டு கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே குணசேகர் (62) ஸ்கூட்டரில் வந்துள்ளார். அவரை சோதனை செய்ததில் அவர் மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 மதுபாட்டில்கள், 10 பாக்கெட் சாராயம், ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News September 15, 2025
விழுப்புரத்தில் இன்றே கடைசி!

விழுப்புரம் மக்களே, BHEL நிறுவனத்தில் Trade அப்ரண்டிஸ் பிரிவில் பிட்டர், வெல்டர், எலெக்ட்ரிஷியன், டர்னர், மெக்கானிஸ்ட், மோட்டார் மெக்கானிக் பயிற்சிக்கு காலியாக உள்ள 760 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ITI, டிப்ளமோ, BE படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (செப்.,15) <
News September 15, 2025
விழுப்புரம்: டூவீலர் வைத்திருப்பவரா நீங்கள்?

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது ஆபத்தானது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
✅ வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும்
✅ வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
✅ 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
✅ பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)
News September 15, 2025
விழுப்புரம்: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க

விழுப்புரம் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.